அமுதத் துளிகள் - ஜீவகாருண்ணியம்

  • அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதல் படியாக இருக்கின்றது. ஆதலால் இதை பாதுகாக்க வேண்டும்.
  • எக்காலத்திலும் புருவமத்தியின் கண்ணே நமது கரணத்தைச் செலுத்த வேண்டும்.
  • சீவர்களுக்கு சீவர்கள் விஷயமாக உண்டாகும் ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்
  • நெற்றியில் ஆன்ம விளக்கம் உள்ளது. அதற்கு பல பெயர்கள் உள்ளன, அவை
    • பிந்துஸ்தானம்
    • அறிவிடம்
    • பாலம்
    • லலாடம்
    • முச்சுடரிடம்
    • முச்சந்திமூலம்
    • முப்பாழ்
    • நெற்றிக்கண்
    • கபாடஸ்தானம்
    • சபாத்துவாரம்
    • மகாமேரு
    • புருவமத்திய மூலம்
    • சிற்சபை
  • ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும், அன்பும் உடனாக விளங்கும். அதனால் உபகார சக்தி விளங்கும், இந்த உபகார சக்தியால், எல்லா நன்மைகளும் தோன்றும்.
  • ஆணவம், கன்மம், மாயை என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசுவென்பது
  • மரணமே நித்தியப் பிரளயம்
  • புலால் எந்த வகையிலும் புசிக்கக் கூடாது
  • ஜீவகாருண்ணியம் என்னும் திறவுகோல் கொண்டே மோட்சவீட்டில் நுழைய முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார் வள்ளல் பெருமான்.
  • அருந்தல் பொருந்தல் சமமானால் மரணம் வராது.
  • ஜீவகாருண்ணியத்தின் முக்கிய லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ணியம் உண்டாவதற்கு துவாரம் யாதெனில் கடவுளின் பெருமையையும் நமது சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தல்.
  • தாகம், இச்சை, எளிமை, பிணி மற்றும் பயம் இவற்றால் வரும் துன்பத்தை நீக்குதல் அபரசீவகாருண்ணியம்
  • பசி, கொலை, இவற்றால் வரும் துன்பத்தை நீக்குதல் பரசீவகாருண்ணியம்.
  • தம் குடும்பத்தை பசியால் தவிக்கவிட்டு அயலார்க்கு பசியாற்றுதல் கடவுளுக்கு சம்மதமல்ல
  • நரக வேதனை, சனன வேதனை, மரண வேதனை மூன்று வேதனைகளும் கூடி முடிந்த வேதனையே பசி வேதனை
  • பகலில் எந்த வகையிலும் நித்திரை ஆகாது.
  • எப்பொழுதும் உற்சாகத்தோடு இருக்கவேண்டும்
  • அகத்தில் ஆன்மா தனித்திருக்கும். ஜீவன் மனமுதலிய அந்தகரண கூட்டத்தின் மத்தியிலிருக்கும்.
  • கடவுளை ஆன்ம அறிவைக் கொண்டே அறிய வேண்டும்.
  • சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காதிருக்கிற வஸ்துக்களாகிய சர்க்கரை, தேன், கற்கண்டு, வெல்லம், அயம் முதலிய செந்தூரம், தாமிரம் முதலிய பஸ்பம் ஆகியவற்றையே உட்கொள்ளவேண்டும்.